லியோ அப்டேட் தந்த அனிரூத்
ADDED : 757 days ago
அட்லீ இயக்கத்தில் நடிகர் ஷாரூக்கான் நடித்து திரைக்கு வந்துள்ள திரைப்படம் 'ஜவான்'. இந்த படத்தில் தமிழ் சினிமா பிரபலங்கள் விஜய் சேதுபதி, நயன்தாரா, பிரியாமணி, யோகி பாபு என பலர் நடித்துள்ளனர். அதேபோல் இந்த படத்திற்கு அனிரூத் தான் இசையமைத்துள்ளார். நேற்று இப்படத்தை காண சென்னையில் உள்ள தனியார் தியேட்டர் ஒன்றிக்கு அட்லீ உடன் படம் பார்க்க வந்தார் அனிரூத். அப்போது செய்தியாளர்களை சந்தித்த அவரிடம் 'லியோ' படத்தின் அப்டேட் குறித்து கேள்வி எழுப்பினர். இதற்கு அனிரூத், இன்னும் ஒரு வாரத்தில் லியோ படத்திலிருந்து பெரிய அப்டேட் ஒன்று வெளியாகிறது என தெரிவித்தார் . இப்போது சமூக வலைதளங்களில் விஜய் ரசிகர்கள் இது லியோ படத்திலிருந்து இரண்டாவது பாடல் வெளியாகிறது என பகிர்ந்து வருகின்றனர்.