உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / 'ஜவான்' முதல் நாள் வசூல் 129 கோடி : அதிகாரப்பூர்வ அறிவிப்பு

'ஜவான்' முதல் நாள் வசூல் 129 கோடி : அதிகாரப்பூர்வ அறிவிப்பு

அட்லீ இயக்கத்தில், அனிருத் இசையமைப்பில், ஷாரூக்கான், நயன்தாரா, விஜய் சேதுபதி மற்றும் பலர் நடிக்க நேற்று வெளியான ஹிந்திப் படம் 'ஜவான்'. இப்படம் தமிழ், தெலுங்கிலும் டப்பிங் செய்யப்பட்டு வெளியாகி உள்ளது.

முன்பதிவிலேயே பெரும் வரவேற்பைப் பெற்ற இப்படத்தின் முதல் நாள் வசூல் 129 கோடியே 60 லட்சம் என தயாரிப்பு நிறுவனமான ரெட் சில்லீஸ் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. முதல் நாளில் அதிக வசூலைப் பெற்ற ஹிந்திப் படம் என்ற புதிய சாதனையை இந்தப் படம் படைத்துள்ளது.

இதற்கு முன்பு ஷாரூக்கான் நடித்து இந்த வருடம் வெளிவந்த 'பதான்' படத்தின் முதல் நாள் வசூலான 105 கோடி சாதனையை இந்தப் படம் முறியடித்துள்ளது. ஒரே ஆண்டில் இப்படி இரண்டு படங்கள் மூலம் சாதனை படைத்த ஒரே நடிகர் ஷாரூக்கான் என்பது குறிப்பிட வேண்டிய ஒன்று.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !