கவினுக்கு ஜோடியாக இரண்டு கதாநாயகிகள்
ADDED : 758 days ago
இளன் இயக்கத்தில் கவின் 'ஸ்டார்' என புதிய படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். ரைஸ் ஈஸ்ட் மற்றும் ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினி சித்ரா என இரு நிறுவனங்களும் இணைந்து இப்படத்தை தயாரிக்கின்றனர். இந்த படத்தில் கதாநாயகியாக யார் நடிக்கின்றார் என அறிவிக்கவில்லை. இந்த நிலையில் அதிதி பொஹங்கர், பிரீத்தி முகுந்தன் என இருவரும் கதாநாயகியாக நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்கிறார்கள்.