உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / இன்றுடன் 500 கோடியைக் கடக்குமா 'ஜவான்'

இன்றுடன் 500 கோடியைக் கடக்குமா 'ஜவான்'

அட்லீ இயக்கத்தில், அனிருத் இசையமைப்பில், ஷாருக்கான், நயன்தாரா, விஜய் சேதுபதி மற்றும் பலர் நடிப்பில் செப்டம்பர் 7ம் தேதியன்று வெளியான படம் 'ஜவான்'. இப்படம் பற்றி இங்குள்ள சிலர் வேறு விதமாக விமர்சித்தாலும், ஹிந்தி சினிமா ரசிகர்கள் இப்படத்தை ஆரவாரத்துடன் வரவேற்றுள்ளார்கள்.

முதல் நாள் வசூலாக 129 கோடியும், இரண்டாவது நாளில் 111 கோடியும் என இரண்டே நாட்களில் மொத்தமாக 240 கோடியை வசூலித்துள்ளது. விடுமறை தினமான நேற்றைய வசூலும் 100 கோடியைக் கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதே போல இன்று ஞாயிறு விடுமுறை தினம் என்பதாலும் இன்றைய வசூலும் 100 கோடியைக் கடக்க வாய்ப்புள்ளது என்றும் பாக்ஸ் ஆபீசில் தெரிவிக்கிறார்கள்.

முந்தைய ஹிந்திப் படங்களின் வசூலை முறியடித்துள்ளது இந்தப் படம். தொடர்ந்து ரசிகர்களின் ஆதரவும் அதிகரித்து வருகிறது. அதனால், நான்கே நாட்களில் இப்படம் 500 கோடி வசூலைக் கடக்குமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !