உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / லியோ - 'நா ரெடி' பாடலின் 'போதை' வரிகளை நீக்கிய சென்சார்

லியோ - 'நா ரெடி' பாடலின் 'போதை' வரிகளை நீக்கிய சென்சார்

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், அனிருத் இசையமைப்பில், விஜய், த்ரிஷா மற்றும் பலர் நடிக்கும் 'லியோ' படத்தில் இடம் பெற்ற 'நா ரெடிதான்' பாடலில் குடிப்பது, புகை பிடிப்பது பற்றிய 'போதை' வரிகள் இடம் பெற்றிருந்தன. அப்பாடல் வெளியான போதே அது குறித்து பலரும் எதிர்ப்புகளைத் தெரிவித்திருந்தனர்.

அப்பாடலில் “பத்தாது பாட்டில் நா குடிக்க, அண்டால கொண்டா சியர்ஸ் அடிக்க,” என்ற வரிகளும் “மில்லி உள்ள போனா போதும், கில்லி வெள்ல வருவான்டா,” என்ற வரிகளும், “பத்த வச்சி புகைய விட்டா பவர் கிக்கு,” என்ற வரிகள் இப்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளன. இந்த லிரிக் வீடியோ முழுவதுமே விஜய் புகை பிடிப்பது போன்ற காட்சிகளே இடம் பெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் அப்பாடலைத் தற்போது டிவியிலும், தியேட்டர்களிலும் திரையிடுவதற்காக சென்சாருக்காக விண்ணப்பித்திருந்தனர். சர்ச்சைக்குரிய அந்த போதை வரிகளை நீக்கி சென்சார் உத்தரவிட்டுள்ளது.

“பத்தாது பாட்டில் நா குடிக்க, அண்டால கொண்டா சியர்ஸ் அடிக்க,” என்ற வரிகளும் “மில்லி உள்ள போனா போதும், கில்லி வெள்ல வருவான்டா,” என்ற வரிகளும், “பத்த வச்சி புகைய விட்டா பவர் கிக்கு,” ஆகிய வரிகள் நீக்கப்பட்டுள்ளது. மேலும், படத்தில் விஜய் புகை பிடிக்கும் காட்சிகளைக் குறைத்தும், குளோசப் காட்சிகளைக் குறைத்தும் உள்ளார்கள். எச்சரிக்கை வாசகங்களின் எழுத்து அளவை இன்னம் அதிகமாக்கவும் உத்தரவிட்டுள்ளார்கள்.

இதன் மூலம் இப்படி போதை, குடி, சிகரெட் ஆகியவற்றை வைத்து பாடல்கள்களை உருவாக்கும் இயக்குனர்கள் இனியாவது இவற்றைத் தவிர்ப்பார்கள் என எதிர்பார்ப்போம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !