எதிர்நீச்சல் ஆதி குணசேகரன் வேடத்தில் அடுத்து நடிக்க போகும் வேல ராமமூர்த்தி!
ADDED : 757 days ago
எதிர்நீச்சல் டிவி தொடரில் ஆதி குணசேகரன் என்ற வேடத்தில் நடித்து வந்த இயக்குனர் மாரிமுத்து திடீரென நெஞ்சுவலியால் மரணம் அடைந்து விட்டதால், எதிர்நீச்சல் சீரியலில் அவர் நடித்த ஆதி குணசேகரன் வேடத்தில் அடுத்து நடிக்கப் போவது யார் என்கிற கேள்விகள் எழுந்திருக்கிறது. இந்த நிலையில், இந்த சீரியலை இயக்கி வரும் திருச்செல்வம் அடுத்து ஆதி குணசேகரன் வேடத்தில் நடிப்பதற்கு, மதயானைக்கூட்டம், கொம்பன், ரஜினிமுருகன், சேதுபதி உள்ளிட்ட பல படங்களில் வில்லன் உள்ளிட்ட பல்வேறு வேடங்களில் நடித்திருக்கும் எழுத்தாளர் வேல ராமமூர்த்தியை நடிக்க வைக்க திட்டமிட்டு அவரிடத்தில் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். இதுகுறித்த தகவல் விரைவில் வெளியாக உள்ளது.