ஜிம்மில் ஒர்க்அவுட் செய்யும் வீடியோவை வெளியிட்ட விஜயலட்சுமி!
ADDED : 888 days ago
வெங்கட் பிரபு இயக்கிய சென்னை-28 என்ற படத்தில் அறிமுகமானவர் விஜயலட்சுமி. இயக்குனர் அகத்தியனின் மகளான இவர் அதன் பிறகு அஞ்சாதே, சரோஜா, பிரியாணி, வெண்ணிலா வீடு உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர். தற்போது ஜெயம் ரவி - நயன்தாரா இணைந்து நடித்திருக்கும் இறைவன் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார். சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருந்து வரும் விஜயலட்சுமி அவ்வப்போது தன்னுடைய புகைப்படங்கள், வீடியோக்களை வெளியிட்டு வருபவர், தற்போது தான் ஜிம்மில் ஒர்க்அவுட் செய்யும் வீடியோவை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். அந்த வீடியோ வைரலாகி வருகிறது.