விஜய் 68ல் சினேகா.. மறைமுகமாக உறுதிப்படுத்திய வெங்கட் பிரபு!
ADDED : 727 days ago
வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் விஜய் தனது 68வது படத்தில் நடிக்கவுள்ளார். ஏ.ஜி.எஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். தற்போது இதன் முன் தயாரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது.
ஏற்கனவே இந்த படத்தில் சினேகா, பிரியங்கா மோகன், பிரசாந்த், பிரபுதேவா ஆகியோர் நடிப்பதாக தகவல்கள் வெளியானது. இப்போது சினேகா இருப்பதை உறுதி செய்யும் விதமாக வெங்கட் பிரபு, சினேகாவுடன் சமீபத்தில் எடுத்து கொண்ட போட்டோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஸ்டோரியில் பகிர்ந்துள்ளார். இப்போது சினேகா, விஜய் 68ல் நடிப்பது உறுதி என சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.