இப்போதைக்கு திருமணம் இல்லை: அனுஷ்கா
ADDED : 758 days ago
தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகர்களுடன் நடித்தவர் நடிகை அனுஷ்கா. சினிமாவில் அறிமுகமாகி 18 வருடங்களுக்கு மேல் ஆகியுள்ளது. சமீபத்தில் இவர் நடித்த ‛மிஸ் ஷெட்டி மிஸ்டர் பொலிஷெட்டி' திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
இதுவரை திருமணம் செய்துகொள்ளாத அனுஷ்காவிடம், சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியின்போது, திருமணம் குறித்து கேள்வி எழுப்பினர். இதற்கு அனுஷ்கா அளித்த பதில்: நிஜமாகவே இதற்கு என்ன பதில் சொல்வது என்று எனக்கு தெரியவில்லை. திருமணம் என்பது இயல்பாகவே உரிய நேரத்தில் நடக்க வேண்டும், அதற்கான நேரம் வரும்போது இயல்பாகவே நடக்கும். திருமணம் செய்துகொள்ளும் திட்டம் இப்போது இல்லை, திருமணம் மகிழ்ச்சியான விஷயம், அது அமையும்போது எல்லோருடனும் பகிர்ந்து கொள்வேன். இவ்வாறு அவர் பதிலளித்தார்.