கார்த்திக் சுப்புராஜின் ‛ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்' டீசர் நாளை வெளியாகிறது!
ADDED : 1064 days ago
கார்த்திக் சுப்புராஜ் ஏற்கனவே இயக்கிய ஜிகர்தண்டா படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்ற நிலையில், தற்போது அப்படத்தின் இரண்டாம் பாகத்தை ‛ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்' என்ற பெயரில் அவர் இயக்கி உள்ளார். ராகவா லாரன்ஸ், எஸ்.ஜே.சூர்யா முக்கிய வேடங்களில் நடித்துள்ள இந்த படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசை அமைத்திருக்கிறார். தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து இறுதி கட்டப் பணிகள் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் இந்த ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தின் டீசர் நாளை (செப்டம்பர் 11) மதியம் 12:12 மணிக்கு வெளியாகும் என்று கார்த்தி சுப்பராஜ் அறிவித்துள்ளார். மேலும் இந்த படம் தீபாவளிக்கு ரிலீசாக இருப்பதாகவும் அவர் உறுதிப்படுத்தி இருக்கிறார்.