உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / ஜெயிலர் படத்தில் பணியாற்றியவர்களுக்கு தங்க நாணயம் பரிசு

ஜெயிலர் படத்தில் பணியாற்றியவர்களுக்கு தங்க நாணயம் பரிசு

ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த ஆகஸ்ட் 10ம் தேதி வெளியான படம் 'ஜெயிலர்'. இந்த படத்தில் மலையாள நடிகர் மோகன்லால், கன்னட நடிகர் சிவராஜ்குமார், ஹிந்தி நடிகர் ஜாக்கி ஷெராப் சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்தனர். ரம்யா கிருஷ்ணன், யோகிபாபு, வசந்த் ரவி, விநாயகன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தார்கள், அனிருத் இசை அமைத்திருந்தார். நெல்சன் திலீப்குமார் இயக்கி இருந்தார்.

படம் நல்ல வரவேற்பை பெற்றது. 600 கோடிக்கு மேல் வசூலித்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் படத் தயாரிப்பு நிறுவனம் ரஜினிகாந்த், இயக்குனர் நெல்சன் திலீப்குமார், இசை அமைப்பளார் அனிருத் ஆகியோருக்கு சொகுசு கார் மற்றும் காசோலைகளை பரிசாக வழங்கியது. தற்போது படத்தில் பணியாற்றிய சுமார் 300க்கும் மேற்பட்ட பணியாளர்கள், துணை நடிகர், நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்களுக்கு தங்க நாணயத்தை பரிசாக வழங்கி உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !