உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / ஆங்கிலோ இந்தியன் பெண்ணாக நடிக்கும் யோகி பாபு

ஆங்கிலோ இந்தியன் பெண்ணாக நடிக்கும் யோகி பாபு

காமெடியனாகவும், கதையின் நாயகனாகவும் நடித்து வரும் யோகி பாபு, தற்போது சில படங்களில் தனது கெட்டப்பை மாற்றி நடிக்கவும் தொடங்கி இருக்கிறார். அந்த வகையில், மிஸ் மேகி என்ற ஒரு படத்தில் அவர் ஆங்கிலோ இந்தியன் பெண் வேடத்தில் நடித்துள்ளார். மாதம்பட்டி ரங்கராஜ், ஆத்மிகா ஆகியோர் இணைந்து நடித்திருக்கும் இந்த படத்தை லதா மணியரசு என்பவர் இயக்கி உள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்துள்ள நிலையில் தற்போது படக் குழுவினர் யோகி பாபு ஆங்கிலோ இந்தியன் பெண் வேடத்தில் நடித்திருக்கும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்கள். விரைவில் இப்படத்தின் இறுதி கட்டப் பணிகள் தொடங்கப்பட்டு, இந்த ஆண்டு இறுதியில் திரைக்கு வர உள்ளதாகவும் படக்குழு தெரிவிக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !