உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / முக்கிய சிக்கல் முடிந்தது :'சலார்' வெளியீடு அறிவிப்பு விரைவில்…

முக்கிய சிக்கல் முடிந்தது :'சலார்' வெளியீடு அறிவிப்பு விரைவில்…

'கேஜிஎப் 2' படத்தின் மூலம் இந்திய அளவில் மிகவும் பிரபலமாகப் பேசப்பட்டவர் கன்னட இயக்குனரா பிரசாந்த் நீல். அப்படத்தை அடுத்து பிரபாஸ், ஸ்ருதிஹாசன், பிருத்விராஜ் மற்றும் பலர் நடிக்கும் 'சலார்' படத்தை இயக்கி வருகிறார். அப்படம் செப்டம்பர் 28ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், அன்றைய தினம் படம் வெளியாகாது என நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்கள்.


படத்தின் ஓடிடி உரிமை, சாட்டிலைட் உரிமை ஆகியவற்றின் விலை எதிர்பார்த்த விலைக்கு அமையவில்லை என்பதால்தான் பட வெளியீட்டைத் தள்ளி வைத்தார்கள் எனச் சொன்னார்கள். இந்நிலையில் படத்தின் ஓடிடி உரிமை, சாட்டிலைட் உரிமை ஆகியவற்றில் சர்வதேச அளவில் பிரபலமான இரண்டு நிறுவனங்கள் வாங்கியுள்ளதாம். அவற்றின் விலையால் மட்டுமே படத்தின் மொத்த பட்ஜெட்டும் வந்துவிட்டதாம். தியேட்டர் உரிமை, இதர உரிமைகள் ஆகியவை படத்திற்குக் கூடுதல் லாபம் என்கிறார்கள்.

இந்த முக்கிய சிக்கல்கள் தீர்ந்ததால் படத்தின் வெளியீடு பற்றி அறிவிப்பை விரைவில் வெளியிட உள்ளார்கள் என்று தகவல் வெளியாகி உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !