சீமான் சூப்பர், அவரை ஒன்றும் செய்ய முடியாது : புகாரை வாபஸ் பெற்றார் நடிகை விஜயலட்சுமி
சென்னை : ‛‛சீமானை ஒன்றும் செய்ய முடியாது, சக்திவாய்ந்தவராக இருக்கிறார், என் தோல்வியை ஒப்புக் கொண்டு பெங்களூருவிற்கே செல்கிறேன், சீமான் நல்லா இருக்கட்டும்'' என அவர் மீதான புகாரை வாபஸ் பெற்றுவிட்டு செய்தியாளர்களிடம் இப்படி கூறிவிட்டு சென்றார் நடிகை விஜயலட்சுமி.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ‛‛சீமானை யாரும் எதுவும் செய்ய முடியாது, சக்திவாய்ந்தவராக இருக்கிறார். தனிஒருவராக என்னால் போராட முடியவில்லை. சீமானை எதிர்கொள்ள யாரும் எனக்கு போதிய ஆதரவு யாரிடமும் இருந்து கிடைக்கவில்லை. காவல்துறை நடவடிக்கை திருப்தி அளிக்கவில்லை. புகார் மீதான நடவடிக்கையில் முன்னேற்றம் இல்லை. தொய்வு இருந்தது. வழக்கை வாபஸ் பெற யாரும் என்னை கட்டாயப்படுத்தவில்லை. புகார் மனு விவகாரத்தில் தோல்வியை ஒப்புக்கொண்டு புகாரை வாபஸ் பெறுகிறேன். சீமானிடம் போனில் பேசினேன். சீமான் சூப்பர். சீமானின் குரல் தான் தமிழ்நாட்டில் ஓங்கி ஒலிக்கிறது. அது ஒலித்துக்கொண்டே இருக்கட்டும். சீமான் நல்ல இருக்கட்டும். நான் மீண்டும் பெங்களூருவுக்கே புறப்படுகிறேன்'' என்றார் விஜயலட்சுமி.