உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / விஜய் பற்றிய கருத்துக்காக மிஷ்கினுக்கு கண்ணீர் அஞ்சலி போஸ்டர்: விஜய் மக்கள் இயக்கத்தினர் அட்டூழியம்

விஜய் பற்றிய கருத்துக்காக மிஷ்கினுக்கு கண்ணீர் அஞ்சலி போஸ்டர்: விஜய் மக்கள் இயக்கத்தினர் அட்டூழியம்

சிவகார்த்திகேயன் நடித்த மாவீரன் படத்தில் வில்லனாக நடித்திருந்த மிஷ்கின், தற்போது விஜய்யின் லியோ படத்திலும் வில்லனாக நடித்துள்ளார். இவர் சமீபத்தில் செய்தியாளர்கள் சந்திப்பின்போது, லியோ திரைப்படம் பார்த்துவிட்டீர்களா என்ற கேள்விக்கு அளித்த பதிலால் விஜய் ரசிகர்கள் கொதித்து போயுள்ளனர். அவர் கூறுகையில், ‛‛தம்பி விஜய் லியோ திரைப்படத்தை பார்த்துவிட்டான், நன்றாக வந்துள்ளது என்று கூறியுள்ளான்'' என்றார்.

விஜய்யை தளபதி என்றே அழையுங்கள் என விஜய் மக்கள் இயக்கத்தினருக்கு அதன் பொது செயலாளர் புஸ்ஸி ஆனந்த் உத்தரவிட்ட நிலையில், ஒருமையில் மிஷ்கின் பேசியதால், ரசிகர்கள் கோபமடைந்தனர். இதற்கு கடும் கண்டனம் தெரிவித்து இயக்குனர் மிஷ்கினுக்கு கண்ணீர் அஞ்சலி போஸ்டரை பரப்பி வருகின்றனர் விஜய் மக்கள் இயக்கத்தினர். இதனால் சினிமா வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !