தெலுங்கில் வெளியாகும் ‛டாடா'
ADDED : 753 days ago
புதுமுக இயக்குனர் கணேஷ் கே பாபு இயக்கத்தில் கவின், அபர்ணா தாஸ், பாக்யராஜ், ஜஸ்வர்யா ஆகியோர் நடித்து சில மாதங்களுக்கு முன்பு வெளிவந்த படம் 'டாடா'. ஒலிம்பியா பிலிம்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரித்தனர். இத்திரைப்படம் விமர்சன ரீதியாக, வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்த பட வெற்றிக்கு பின் கவினை தேடி பல வாய்ப்புகள் வர தொடங்கி உள்ளன. தற்போது ஸ்டார் உள்ளிட்ட இரண்டு படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் டாடா படத்தை தெலுங்கு பதிப்பில் விரைவில் திரையரங்குகளில் வெளியிடுகின்றனர். இதற்கு 'பா பா' என தலைப்பு வைத்துள்ளதாக போஸ்டர் உடன் அறிவித்துள்ளனர்.