மாரிமுத்துவுக்காக கேரக்டரையே மாற்றிய எதிர்நீச்சல் இயக்குநர்
ADDED : 752 days ago
எதிர்நீச்சல் தொடரில் நடித்து வந்த மாரிமுத்து எதிர்பாராத விதமாக மாரடைப்பால் காலமானார். இதனை தொடர்ந்து இனி ஆதிகுணசேகரானாக யார் நடிப்பார்? என்ற கேள்வி சோஷியல் மீடியாவில் விவாதத்தையே கிளப்பியது. ஆனால், இதுவரை மாரிமுத்து நடித்த ஆதிகுணசேகரன் கதாபாத்திரத்தில் யாருமே தேர்வாகவில்லையாம். அதனால் அந்த கதாபாத்திரத்தில் எந்த நடிகரையும் மாற்ற முடியவில்லை. எனவே, ஆதிகுணசேகரன் கதாபாத்திரத்திற்கு இணையாக ஆதிபகவன் என்ற கதாபாத்திரத்தை சீரியல் குழு உருவாக்கியுள்ளது. இதற்கான லீட் காட்சியும் அண்மையில் ஒளிபரப்பான எபிசோடில் இடம் பெற்றது. ஆதிகுணசேகரனின் அண்ணனாக இந்த ஆதிபகவன் கதாபாத்திரம் இடம்பெறும் எனவும் இனி வரும் எபிசோடுகள் ஆதிபகவனை மையப்படுத்தி நகரும் எனவும் தகவல் வெளியாகி வருகிறது.