உலகின் மிக அழகான பெண்ணுடன் நான் - அசோக் செல்வன் வெளியிட்ட பதிவு!
தெகிடி, ஓ மை கடவுளே, போர் தொழில் உட்பட பல படங்களில் நடித்தவர் அசோக் செல்வன். இவரும் நடிகை கீர்த்தி பாண்டியனும் ப்ளூ ஸ்டார் என்ற படத்தில் நடித்து வருகிறார்கள். இந்த படத்தில் நடிக்க தொடங்கிய போது அவர்களுக்கிடையே காதல் உருவாகி தற்போது திருமணம் செய்து கொண்டுள்ளார்கள். மேலும் நடிகர் அருண்பாண்டியனின் மகளான கீர்த்தி பாண்டியன், அன்பிற்கினியாள், கொஞ்சி பேசினாள் போன்ற படங்களில் நடித்திருக்கிறார்.
இந்நிலையில் அசோக் செல்வன் - கீர்த்தி பாண்டியன் திருமணம் கடந்த 13ம் தேதி நடைபெற்றது. அவர்களின் திருமண புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வெளியான போது சிலர் அவர்களின் ஜோடியை விமர்சித்து கருத்து வெளியிட்டுள்ளார்கள். இந்த நிலையில் கீர்த்தி பாண்டியனுடன் தான் இடம்பெற்றுள்ள ஒரு புகைப்படத்தை வெளியிட்டு, 'இந்த உலகின் மிக அழகான பெண்ணுடன் நான்' என்று பதிவிட்டு, விமர்சித்தவர்களுக்கு ஒரு பதிலடி கொடுத்துள்ளார் அசோக் செல்வன்.