உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / என் மகள் மீரா மிகவும் அன்பானவள் தைரியமானவள்: விஜய் ஆண்டனி

என் மகள் மீரா மிகவும் அன்பானவள் தைரியமானவள்: விஜய் ஆண்டனி

சென்னை: என் மகள் மீரா மிகவும் அன்பானவள், தைரியமானவள் என விஜய் ஆண்டனி தெரிவித்து உள்ளார்.

நடிகரும், இசையமைப்பாளருமான விஜய் ஆண்டனியின் மகள் மீரா(16) சில தினங்களுக்கு முன் தற்கொலை செய்து கொண்டார். அவரது உடல் சென்னை, கீழ்ப்பாக்கத்தில் உள்ள கல்லறை தோட்டத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது. முன்னதாக திரையுலகினர் பலரும் மீராவின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.

விஜய் ஆண்டனி வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்து இருப்பதாவது: என் மகள் மீரா மிகவும் அன்பானவள் தைரியமானவள். அவள் இப்போது சாதி, மதம், பணம், பொறுமை, வலி, வன்மம், இல்லாத ஒரு அமைதியான இடத்திற்கு தான் சென்று இருக்கிறாள். என்னிடம் பேசிக்கொண்டு தான் இருக்கிறாள். அவளுடன் நானும் இறந்து விட்டேன். நான் இப்போது அவளுக்காக நேரம் செலவிட ஆரம்பித்து விட்டேன். அவள் பெயரில் நான் செய்யப் போகும் நல்ல காரியங்களை அனைத்தையும் அவளே துவங்கி வைப்பாள்.

இவ்வாறு தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !