மேலும் செய்திகள்
நஷ்டத்துடன் ஓட்டத்தை முடிக்கும் 'வார் 2'
716 days ago
செப்டம்பர் 12 ரிலீஸ் படங்கள் 10 ஆக உயர்வு
716 days ago
ஆரம்பமானது தெலுங்கு பிக் பாஸ் சீசன் 9
716 days ago
தெலுங்கு திரையுலகின் சீனியர் நடிகரான மோகன்பாபுவின் மகன் விஷ்ணு மஞ்சு நடிக்க உள்ள படம் கண்ணப்பா. அவரது படங்களிலேயே மிகப்பெரிய பொருட்செலவில் இந்த படம் உருவாக இருக்கிறது. இந்த படத்தில் கிரீத்தி சனோனின் தங்கை நூபுர் சனோன் கதாநாயகியாக நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தார். கடந்த ஆகஸ்ட்-21ல் இந்தப் படத்தின் துவக்க விழா பூஜை நடைபெற்றது. இந்த நிலையில் தற்போது இந்த படத்தில் இருந்து திடீரென வெளியேறியுள்ளார் நூபுர் சனோன்.
கண்ணப்பா படத்தின் படப்பிடிப்பு தாமதமாவதால் அதற்கேற்றபடி தனது கால்சீட்டை மாற்றித் தர வழி இல்லை என்பதால் துவக்கத்திலேயே இந்த படத்தில் இருந்து வெளியேறி உள்ளார் நூபுர் சனோன். இந்த தகவலை படத்தின் ஹீரோ விஷ்ணு மஞ்சுவே அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளவுடன், “கால்சீட் காரணமாக நூபுர் சனோன் வெளியேறுவது வருத்தமாக தான் இருக்கிறது. மீண்டும் அவருடன் வேறொரு படத்தில் இணைந்து பணியாற்றும் வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கிறேன். அதேசமயம் கண்ணப்பா படத்திற்கான புதிய கதாநாயகி தேடல் துவங்குகிறது” என்று கூறியுள்ளார்.
716 days ago
716 days ago
716 days ago