மேலும் செய்திகள்
கென் கருணாஸ் படத்தில் மூன்று நாயகிகள்!
715 days ago
‛இட்லி கடை' படத்தில் அஸ்வின் ஆக அருண் விஜய்!
715 days ago
ரவி அரசிடம் விஷால் வைத்த கோரிக்கை!
715 days ago
கடந்த சில வருடங்களில் வெளியான தர்பார், அண்ணாத்த படங்கள் வரவேற்பை பெறாததால் துவண்டு போய் இருந்த நடிகர் ரஜினிகாந்துக்கு கடந்த மாதம் வெளியான ஜெயிலர் திரைப்படத்தின் வெற்றி மிகப்பெரிய உற்சாகத்தை கொடுத்துள்ளது. இதைத் தொடர்ந்து அவரது மகள் ஐஸ்வர்யா இயக்கத்தில் கெஸ்ட் ரோலில் நடித்துள்ள லால்சலாம் திரைப்படம் ரிலீஸுக்கு தயாராகி வருகிறது. ஆனாலும் ரசிகர்கள் அடுத்ததாக எதிர்பார்ப்பது ரஜினியின் 170 மற்றும் 171வது படங்களைத் தான்.
அந்த வகையில் ரஜினியின் 170வது படத்தை ஜெய்பீம் இயக்குனர் த.செ.ஞானவேல் இயக்குகிறார். இந்த படம் என்கவுன்டர் பற்றியும் அதன் பின்னணியில் உள்ள அரசியலைப் பற்றியும் பேசும் படமாக உருவாக இருக்கிறதாம். இந்த படத்திலும் ரஜினிகாந்த் போலீஸ் அதிகாரியாக தான் நடிக்கிறார் என்றும் இந்த படத்தின் கதையும் கதைக்களமும் கன்னியாகுமரி பின்னணியில் நிகழ்கிறது என்றும் சொல்லப்படுகிறது.
நடிகர் ரஜினிகாந்த் கன்னியாகுமரி பாஷையிலேயே படம் முழுக்க பேசுகிறார் என்றும் அதற்காக சிறப்பு பயிற்சி எடுக்கிறார் என்றும் சொல்லப்படுகிறது. இதுநாள் வரை ரஜினிகாந்த் நடித்த படங்களில் அவர் பேசும் வசனங்கள் விதவிதமான மாடுலேஷனில் இருந்தாலும் ஒரே விதமான தமிழ் பாஷையிலேயே இருந்து வந்தது. குறிப்பாக படு ஸ்பீடாக பேசக்கூடிய ரஜினிகாந்த் இந்த கன்னியாகுமரி பாஷையை எப்படி தனது பாணியில் பேசப் போகிறார் என்பதை பார்ப்பதற்கு ரசிகர்கள் ஆவலாக இருக்கின்றனர்..
715 days ago
715 days ago
715 days ago