கிர்த்தி ஷெட்டியுடன் நடிக்க மறுத்தது ஏன்? - விஜய் சேதுபதி விளக்கம்
ADDED : 752 days ago
நடிகர் விஜய் சேதுபதி தெலுங்கில் வில்லனாக நடித்த படம் உப்பென்னா. இந்த படத்தில் அவரது மகளாக கீர்த்தி ஷெட்டி நடித்திருந்தார். இந்த நிலையில் அதன் பிறகு தமிழில் விஜய் சேதுபதி நாயகனாக நடிக்க கமிட்டான ஒரு படத்தில் கிர்த்தி ஷெட்டியை ஹீரோயினாக ஒப்பந்தம் செய்தபோது அதற்கு அவர் தடை போட்டார். இதுபற்றி தான் அளித்துள்ள ஒரு பேட்டியில், அது குறித்து ஒரு விளக்கம் கொடுத்திருக்கிறார் விஜய் சேதுபதி.
அவர் கூறுகையில், ‛‛உப்பென்னா தெலுங்கு படத்தில் கிர்த்தி ஷெட்டிக்கு தந்தையாக நடித்திருந்தேன். அது ஒரு மிகப்பெரிய வெற்றி படம். மகளாக நடித்த அவருடன் நான் ரொமான்ஸ் செய்து நடிக்க விரும்பவில்லை. அதனால் தான் அவரை தவிர்த்து விட்டு வேறு நடிகையை ஒப்பந்தம் செய்யுமாறு கூறினேன்'' என தெரிவித்துள்ளார் விஜய் சேதுபதி.