உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / நெல்சன் தயாரிப்பில் கவின்

நெல்சன் தயாரிப்பில் கவின்

நடிகர் கவின் டாடா படத்தின் வெற்றிக்குப் பிறகு இளைஞர்கள் மத்தியில் நம்பிக்கை நட்சத்திரமாக மாறியுள்ளார். 'ஸ்டார்', சதீஷ் கிருஷ்ணன் இயக்கத்தில் ஒரு படம் ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இந்த நிலையில் ஒரு புதிய படத்தில் கவின் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இயக்குனர் நெல்சன் முதல் முறையாக ஒரு படத்தை தயாரிக்கவுள்ளார். இதில் கவின் ஹீரோவாக நடிக்கிறார். இப்படத்தை நெல்சனின் உதவி இயக்குனர் சிவபாலன் என்பவர் இயக்குகிறார். கதாநாயகியாக பிரியங்கா மோகன் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்கிறார்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !