விபத்தில் இறந்த ரசிகரின் பெற்றோருக்கு ஆறுதல் கூறிய சூர்யா!
ADDED : 736 days ago
நடிகர் சூர்யா தற்போது சிறுத்தை சிவா இயக்கி வரும் கங்குவா என்ற படத்தில் நடித்து வருகிறார். பத்துக்கும் மேற்பட்ட கெட்டப்புகளில் சூர்யா நடிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் சமீபத்தில் சூர்யா ரசிகர் மன்றத்தை சேர்ந்த நிர்வாகி அரவிந்தன் என்பவர் சாலை விபத்தில் மரணமடைந்தார்.
இது குறித்த தகவல் சூர்யாவுக்கு வந்ததை அடுத்து சென்னை எண்ணூரில் அமைந்துள்ள தனது ரசிகர் அரவிந்தன் வீட்டுக்கு சென்று அவரது புகைப்படத்துக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தி உள்ளார். அதையடுத்து அரவிந்தனின் பெற்றோரிடமும் நீங்கள் என்ன உதவி கேட்டாலும், அது செய்வதற்கு தான் தயாராக இருப்பதாகவும் வாக்குறுதி அளித்துவிட்டு திருப்பி உள்ளார் சூர்யா. தனது ரசிகருக்கு சூர்யா அஞ்சலி செலுத்திய புகைப்படம் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.