சிம்பு 48வது படத்தில் இணையும் கேஜிஎப் இசையமைப்பாளர்!
ADDED : 736 days ago
பத்து தல படத்தை அடுத்து தேசிங்கு பெரியசாமி இயக்கும் தனது 48வது படத்தில் நடிக்கப் போகிறார் சிம்பு. இப்படத்தை கமல்ஹாசனின் ராஜ் கமல் பிலிம்ஸ் தயாரிக்கிறது. இந்த படத்தில், தான் நடிக்கப் போகும் கதாபாத்திரத்துக்காக அமெரிக்கா சென்று சில தற்காப்பு கலைகளை பயின்றுவிட்டு திரும்பி இருக்கும் சிம்பு, நீண்ட தலை முடி, தாடி என தனது கெட்டப்பை மாற்றியுள்ளார்.
தற்போது அப்படத்தின் ஆரம்ப கட்டப் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், விரைவில் படப்பிடிப்பு நடைபெற உள்ளது. இந்த நிலையில் சிம்புவின் இந்த 48வது படத்திற்கு பிரசாந்த் நீல் இயக்கத்தில் யஷ் நாயகனாக நடித்த கேஜிஎப் படத்திற்கு இசையமைத்த ரவி பஸ்ரூர் என்பவர் இசையமைப்பாளராக நியமிக்கப்பட்டு இருக்கிறார். இதன் காரணமாக இப்படத்திற்கான எதிர்பார்ப்பு மேலும் எகிறி உள்ளது.