உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / அக்., 27ல் ரிலீஸாகும் கங்கனாவின் ‛தேஜஸ்'

அக்., 27ல் ரிலீஸாகும் கங்கனாவின் ‛தேஜஸ்'

பாலிவுட்டில் முன்னணி நடிகையாக இருப்பவர் கங்கனா. சமீபத்தில் தமிழில் இவரது நடிப்பில் வெளியான ‛சந்திரமுகி 2' படம் கமர்ஷியல் ரீதியாக வரவேற்பை பெற்றுள்ளது. அடுத்து ஹிந்தியில் அவர் நடிப்பில் ‛எமெர்ஜென்சி, தேஜஸ்' ஆகிய இரு படங்கள் வெளியாக உள்ளன. இவற்றில் சர்வேஷ் மேவாரா இயக்கத்தில் உருவாகி உள்ள படம் தான் ‛தேஜஸ்'. இந்திய விமானபடையில் போர் விமானங்களை இயக்க 3 பெண் விமானிகள் 2016ல் நியமிக்கப்பட்டனர். இதை தழுவி கற்பனை கலந்து இந்த படம் எடுக்கப்பட்டுள்ளது. இதில் போர் விமானியாக கங்கனா நடித்துள்ளார்.

2020ல் ஆரம்பமான இப்படம் பல்வேறு காரணங்களால் தடைபட்டு இப்போது ஒருவழியாக ரிலீஸிற்கு தயாராகி உள்ளது. அக்., 20ல் இந்த படம் ரிலீஸ் என கூறப்பட்டது. இந்நிலையில் இதன் டீசர் வெளியாகி உள்ளது. அதில் இம்மாதம் 27ம் தேதி படம் வெளியாவதாக அறிவித்துள்ளனர். அதோடு அக்., 8ல், இந்திய விமான படை தினத்தில் டிரைலரை வெளியிடுகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !