சூர்யா, அல்லு அர்ஜூன் படம் : உறுதி செய்த போயபட்டி சீனு
ADDED : 964 days ago
தெலுங்கு இயக்குனர் போயபட்டி சீனு தொடர்ந்து மாஸ் மசாலா படங்களை இயக்கி வருகிறார். அவர் படங்களுக்கு என பெரும் ரசிகர்கள் பட்டாளம் உள்ளது. சமீபத்தில் அவர் இயக்கத்தில் வெளிவந்த ஸ்கந்தா திரைப்படம் வசூல் ரீதியாக சுமாரான வரவேற்பைப் பெற்றது.
தற்போது போயபட்டி சீனு அளித்த பேட்டி ஒன்றில், தனது அடுத்த படங்களை பற்றி தெரிவித்துள்ளார் அதன்படி, எனது அடுத்த அடுத்த படத்திற்காக சூர்யா மற்றும் அல்லு அர்ஜுன் உடன் கதை கூறி உறுதி செய்துள்ளேன். இதில் யார் படம் முதலில் தொடங்கும் என தெரியவில்லை . இதையடுத்து பாலகிருஷ்ணாவை வைத்து அகண்டா இரண்டாம் பாகத்தை இயக்கவுள்ளேன் என இவ்வாறு பகிர்ந்துள்ளார்.