உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / மீண்டும் ரவிக்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன்

மீண்டும் ரவிக்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன்

கடந்த 2018ல் ரவிகுமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் தொடங்கிய படம் 'அயலான்'. ரகுல் பிரீத் சிங், இஷா கோபிகர், யோகிபாபு, கருணாகரன் உள்ளிட்டோர் இணைந்து நடித்துள்ளனர். கே.ஜி.ஆர் ஸ்டுடியோஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார்.

இந்த படத்தின் டீசர் வெளியிட்டு விழா நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட சிவகார்த்திகேயன், அயலான் படத்தை தொடர்ந்து மீண்டும் ரவிக்குமார் இயக்கத்தில் தான் புதிய படத்தில் நடிக்கவுள்ளதாக தெரிவித்தார். தற்போது இந்த தகவல் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அயலான் டீசரும் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்று உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !