மேலும் செய்திகள்
நடிகை காஜல் அகர்வால் குறித்து தீயாய் பரவும் வதந்தி
701 days ago
அமீர்கான் படத்தை கைவிட்டாரா லோகேஷ் கனகராஜ்
701 days ago
நடிகர் விஜய் நடிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், அனிருத் இசையில், செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் தயாரித்துள்ள படம் ‛லியோ'. இப்படத்திற்கு தணிக்கைக்குழு யு/ஏ தரச்சான்றிதழ் வழங்கி இருக்கிறது. படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. டிரைலரில் விஜய், ஆபாச வார்த்தையை பேசும் வசனமும் இடம் பெற்றுள்ளது பலரையும் அதிர்ச்சி அடைய செய்தது.
பலரும் அந்த வசனத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இது தொடர்பாக லோகேஷ் கனகராஜ் கூறியதாவது: படத்திற்கு தேவைப்பட்டதால் டிரைலரில் அந்த வார்த்தையும் இடம்பெற்றுள்ளது. அப்பாவியான ஒருவர் தான் இருந்த அழுத்தமான மனநிலை சூழலில் பேசியுள்ளதை காட்சிப்படுத்தி இருக்கிறேன். அந்த வார்த்தையால் யாரின் மனது புண்பட்டாலோ, யாரேனும் கண்டனத்தை தெரிவித்தாலோ, அதற்கு முழு பொறுப்பு நானே. அதற்கும் நடிகர் விஜய்க்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை.
அந்த வசனம் இடம்பெற்ற காட்சி உட்பட 6 நிமிட காட்சிகளை ஒரே ஷாட்டில் நாங்கள் படம்பிடித்தோம். காலையில் படப்பிடிப்பு தொடங்கும்போதே, வசனங்களை பார்த்துவிட்டு நான் கட்டாயம் அந்த வார்த்தையை பேச வேண்டுமா? என விஜய் கேட்டார். கதாபாத்திரத்திற்கு அவை தேவைப்படுகிறது என கூறி நானே விஜயை பேசவைத்தேன். அவர் பொதுவாக இயக்குனர் கூறும் விஷயங்களை செய்ய வேண்டும் என நினைப்பார். அதில் மறுப்பு சொல்ல விரும்பமாட்டார். இவ்விவகாரத்தில் தயக்கம் இருந்ததும், என்னிடம் மீண்டும் கேட்டார். நான் கூறியதால் அதனை பேசினார். அதற்கு நானே பொறுப்பு. இவ்வாறு அவர் கூறினார்.
701 days ago
701 days ago