மேலும் செய்திகள்
நடிகை காஜல் அகர்வால் குறித்து தீயாய் பரவும் வதந்தி
701 days ago
அமீர்கான் படத்தை கைவிட்டாரா லோகேஷ் கனகராஜ்
701 days ago
தென்னிந்திய படங்களில் முன்னணி நடிகையாக திகழ்ந்தவர் நடிகை ரோஜா. தற்போது அவர் ஆந்திரா மாநிலத்தில் உள்ள ஜெகன்மோகன் ரெட்டியின் அமைச்சரவையில் அமைச்சராக இருந்து வருகிறார். இந்நிலையில் தெலுங்கு தேசம் கட்சியை சார்ந்த முன்னாள் அமைச்சரான பண்டாரு சத்திய நாராயண மூர்த்தி என்பவர் ரோஜா குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசி இருந்தார். அதாவது ரோஜா ஆபாச படத்தில் நடித்திருப்பதாகவும், அது குறித்த வீடியோவை நான் வெளியிடுவேன் என்றும் சொல்லி ஒரு பரபரப்பை ஏற்படுத்தினார்.
இதற்கு ரோஜா கடுமையான எதிர்ப்பு தெரிவித்தார். மீடியாக்களுக்கு பேட்டி கொடுக்கும்போது கண் கலங்கினார். இந்த நிலையில் தற்போது திரையுலகை சேர்ந்த நடிகைகள் பலரும் ரோஜாவுக்கு ஆதரவாகவும், அவரை மோசமாக விமர்சித்த முன்னாள் ஆந்திர அமைச்சருக்கு எதிராகவும் குரல் கொடுத்து வருகிறார்கள். குறிப்பாக நேற்று இதற்கு எதிராக நடிகை ராதிகா தனது கருத்தை வெளியிட்ட நிலையில், இன்று நடிகை ரம்யா கிருஷ்ணனும் அது குறித்து ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார்.
அந்த வீடியோவில், ‛‛இந்திய நாட்டை ஒரு பெண்ணாக மதித்து போற்றி வருகிறோம். ஆனால் அப்படிப்பட்ட இந்த நாட்டில் தான் பெண்களை அவமானப்படுத்துகிறார்கள். ரோஜாவை மோசமாக விமர்சனம் செய்த அந்த நபரை சும்மா விடக்கூடாது. அவரை யாரும் மன்னிக்கக் கூடாது. நான் எப்போதுமே ரோஜாவுக்கு துணை நிற்பேன். இது குறித்து இந்திய பிரதமர் மோடி தலையிட்டு, சம்பந்தப்பட்ட நபர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்று அந்த வீடியோவில் ரம்யா கிருஷ்ணன் பேசி உள்ளார். அவர் எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள அந்த வீடியோ வைரலாகி வருகிறது.
701 days ago
701 days ago