உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / அக்டோபர் 13ல் திரைக்கு வரும் பரத்-ரகுமான் நடித்த சமாரா!

அக்டோபர் 13ல் திரைக்கு வரும் பரத்-ரகுமான் நடித்த சமாரா!

சார்லஸ் ஜோசப் என்பவர் இயக்கத்தில் பரத், ரகுமான், சஞ்சனா தீபு, ராகுல் மாதவ் உள்பட பலரது நடிப்பில் உருவாகியுள்ள படம் சமாரா. இப்படத்தின் டிரைலர் கடந்த ஜூலை மாதம் வெளியானது. இந்நிலையில் இன்று, சமாரா படம் வருகிற அக்டோபர் 13ம் தேதி திரைக்கு வர இருப்பதாக ஒரு போஸ்டர் மூலம் படக் குழு அறிவித்துள்ளது.

அந்த போஸ்டரில் பரத்தும், ரகுமானும் இடம்பெற்றுள்ளார்கள். வருகிற 19ம் தேதி லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்திருக்கும் லியோ படம் திரைக்கு வரும் நிலையில், அதற்கு ஆறு நாட்களுக்கு முன்பே இந்த படம் திரைக்கு வரவுள்ளது. மலையாளத்தில் உருவாகியுள்ள இப்படத்தை தமிழிலும் டப் செய்து வெளியிடுகிறார்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !