குக்வித் கோமாளி மணிமேகலைக்கு காலில் என்னாச்சு.?
ADDED : 740 days ago
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூன்று சீசனிலும் பங்கேற்று பிரபலமானவர் மணிமேகலை. தொகுப்பாளியான இவர், சோசியல் மீடியாவில் ஆக்டிவ்வாக இருக்கும் இவர், தற்போது இன்ஸ்டாகிராமில் தனது காலில் கட்டு போட்டபடி, சோகமாக அமர்ந்திருக்கும் ஒரு புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். அதோடு, வீட்டில் நடந்து சென்று கொண்டிருக்கும் போது திடீரென தவறி விழுந்து விட்டேன். அந்த விபத்து காரணமாக காலில் காயம் ஏற்பட்டுள்ளது என்று அவர் ஒரு கேப்ஷன் கொடுத்துள்ளார். அதைப் பார்த்த நெட்டிசன்கள், அவர் சீக்கிரம் குணமாவதற்கு தங்களது வாழ்த்துக்களை கமெண்டாக கொடுத்து வருகிறார்கள்.