உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / 100 மில்லியனைக் கடந்த விக்ரம், கீர்த்தி சுரேஷ் பாடிய 'சாமி 2' பாடல்

100 மில்லியனைக் கடந்த விக்ரம், கீர்த்தி சுரேஷ் பாடிய 'சாமி 2' பாடல்

ஹரி இயக்கத்தில், தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைப்பில், விக்ரம், கீர்த்தி சுரேஷ் மற்றும் பலர் நடிப்பில் 2018ல் வெளிவந்த படம் 'சாமி ஸ்கொயர்'. அப்படத்தில் தேவி ஸ்ரீ பிரசாத் எழுதி, இசையமைத்த 'புது மெட்ரோ ரயில்' என்ற பாடலை விக்ரம், கீர்த்தி சுரேஷ் இருவரும் இணைந்து பாடியிருந்தார்கள். அப்பாடல் 2018ம் ஆண்டு அக்டோபர் 4ம் தேதி யு டியூபில் பதிவேற்றப்பட்டிருந்தது.

5 ஆண்டுகளுக்குப் பிறகு இப்போது அந்தப் பாடல் 100 மில்லியன் பார்வைகளைக் கடந்துள்ளது. தமிழ், தெலுங்கில் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவராக இருக்கும் தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்த ஒரு தமிழ்ப் படப் பாடல் கூட 100 மில்லியன் பார்வைகளை இதுவரைக் கடந்ததில்லை. முதல் முறையாக 'சாமி ஸ்கொயர்' படத்தின் இந்தப் பாடல் கடந்துள்ளது.

ஒரு பாடல் வெளியாகி உடனடியாக 100 மில்லியன் பார்வைகளைக் கடந்த பாடல்கள்தான் நிறைய இருக்கிறது. ஆனால், சமீப காலங்களில் பாடல் வெளியான ஐந்தாறு ஆண்டுகளுக்குப் பிறகு கூட 100 மில்லியன் பார்வைகளைக் கடக்கிறது.

சமீபத்தில் 'பையா' படத்தில் இடம் பெற்ற 'துளித் துளி மழையாய்' வந்தாலே பாடல் 9 ஆண்டுகளுக்குப் பிறகும், 'தர்மதுரை' படத்தில் இடம் பெற்ற 'மக்கக் கலங்குதப்பா' பாடல் 7 ஆண்டுகளுக்குப் பிறகும் 100 மில்லியன் பார்வைகளைக் கடந்தது. 5 ஆண்டுகளுக்குப் பிறகு 'புது மெட்ரோ ரயில்' பாடல் அந்த வரிசையில் இடம் பெற்றுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !