நான் புதிய பாதையில் பயணிக்க உள்ளேன் - ராகவா லாரன்ஸ்
ADDED : 729 days ago
நடன இயக்குனர் மற்றும் நடிகர் ராகவா லாரன்ஸ் முனி, காஞ்சனா ஆகிய படங்களில் நடித்தது மூலம் தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத இடத்தை பிடித்தவர். சமீபத்தில் அவர் நடித்து வெளிவந்த ருத்ரன் படம் தோல்வி அடைந்தது. சந்திரமுகி 2 சுமாரான வெற்றியை பெற்றது.
தற்போது ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தில் நடித்துள்ளார். அவர் கூறியதாவது, பழைய கதைகள் இனி வேலைக்கு ஆகாது. கொரோனா காலத்திற்கு பிறகு நிறைய மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது. இன்றைய தலைமுறை இயக்குனர்கள் லோகேஷ், நெல்சன் ஆகியோர் கதைக்கு முக்கியத்துவம் அளிப்பதில்லை. திரைக்கதை மற்றும் சண்டை காட்சிகளில் கவனம் செலுத்தி வருகின்றனர் . நானும் இந்த புதிய பாதையில் பயணிக்க தொடங்கியுள்ளேன். இதற்கு பதில் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்தில் கிடைக்கும் என தெரிவித்துள்ளார்.