மார்க் ஆண்டனி - 25வது நாள், 100 கோடி வசூல்
ADDED : 729 days ago
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில், விஷால், எஸ்ஜே சூர்யா நடித்து கடந்த மாதம் வெளிவந்த படம் 'மார்க் ஆண்டனி'. இப்படம் இன்று 25வது நாளைத் தொட்டுள்ளது. அது மட்டுமல்ல 100 கோடி வசூலையும் பெற்றுள்ளது.
தமிழகத்தில் மட்டும் இப்படம் 70 கோடி வசூலைப் பெற்றுள்ளதாக அதன் தயாரிப்பாளர் வினோத்குமார் டுவிட்டரில் தெரிவித்துள்ளார். இதர மாநிலங்கள், வெளிநாட்டு வசூல் ஆகியவற்றின் மூலம் 30 கோடி வசூல் கிடைத்துள்ளது.
விஷால் நடித்து இதுவரை வெளிவந்த படங்கள் 100 கோடியைத் தொட்டது கிடையாது. இதுவே முதல் முறை. கடந்த பல படங்களாகத் தோல்வியை மட்டுமே பார்த்து வந்த விஷாலுக்கு இந்தப் படம் பெரிய திருப்புமுனையை ஏற்படுத்திக் கொடுத்துள்ளது.