விஜய் சேதுபதியை இயக்கும் மிஷ்கின்
ADDED : 727 days ago
ஆண்ட்ரியா முக்கிய வேடத்தில் நடித்த பிசாசு 2 என்ற படத்தை இயக்கி உள்ளார் மிஷ்கின். அந்த படம் இன்னும் திரைக்கு வரவில்லை. அதையடுத்து சிவகார்த்திகேயனுடன் மாவீரன் படத்தில் நடித்திருந்த மிஷ்கின், பின்னர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்திருக்கும் லியோ படத்திலும் வில்லனாக நடித்திருக்கிறார். இந்த நிலையில் அடுத்தபடியாக விஜய் சேதுபதியை நாயகனாக வைத்து தனது புதிய படத்தை அவர் இயக்கப் போகிறார். தற்போது அந்த படத்தின் ஆரம்பகட்ட பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. மிஷ்கினும், விஜய் சேதுபதியும் இணையும் இப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் தொடங்க உள்ளது. எஸ். தாணு தயாரிக்க, ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.