தொழிலதிபரை மணந்த ஹர்ஷலா
ADDED : 733 days ago
சந்திரலேகா தொடரின் மூலம் தமிழ் சின்னத்திரையில் என்ட்ரியானார் நடிகை ஹர்ஷலா. கன்னட சீரியல்களில் மிகவும் பிரபலமான இவர் தற்போது விஜய் டிவியின் ‛சிறகடிக்க ஆசை' என்கிற தொடரில் நடித்து வருகிறார். இவர் கடந்த 8ம் தேதி அர்விந்த் என்கிற தொழிலதிபரை திருமணம் செய்து கொண்டுள்ளார். தனது திருமண புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு 'எனது கணவரை அறிமுகப்படுத்துகிறேன்' என பகிர்ந்துள்ளார். இதனையடுத்து சக நடிகர்கள் ரசிகர்கள் என பலரும் ஹர்ஷலாவுக்கு தங்களது வாழ்த்துகளை குவித்து வருகின்றனர்.