கேப்டன் மில்லர் படத்தின் புதிய அப்டேட்
ADDED : 726 days ago
அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் தயாராகி வரும் படம் 'கேப்டன் மில்லர்'. சிவராஜ் குமார், பிரியங்கா மோகன், சந்தீப் கிஷன், ஜான் கொக்கைன் மற்றும் பலர் இதில் நடித்துள்ளனர். சத்யஜோதி பிலிம்ஸ் தயாரித்துள்ள இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார் வருகின்ற டிசம்பர் 15ம் தேதி அன்று தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் இப்படம் வெளியாகிறது.
சமீபத்தில் இந்த படத்தை கர்நாடகாவில் கே.ஆர்.ஜி ஸ்டுடியோஸ் நிறுவனம் வெளியிடுவதாக அறிவித்ததைத் தொடர்ந்து தற்போது இந்த படத்தை கர்நாடகா மாநிலத்தில் தமிழ், கன்னடம் என இரு மொழிகள் வெளியிட விநியோகஸ்தர் முடிவு செய்துள்ளார். மேலும், இதற்காக கன்னடத்தில் சிவராஜ் குமார், பிரியங்கா மோகன் என இருவரையும் தனது சொந்த குரலில் டப்பிங் பணிகளை நடத்த முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.