விடாமுயற்சிக்கு பிறகு அஜித்தை இயக்கப் போகும் இரண்டு இயக்குனர்கள்
ADDED : 754 days ago
எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடித்த துணிவு படம் வெளியாகி 8 மாதங்களுக்கு பிறகு தற்போது தான் அவரது அடுத்த படமான விடாமுயற்சியின் படப்பிடிப்பு அஜர்பைனாஜில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. மகிழ்திருமேனி இயக்கும் இந்த படத்தில் அஜித்துக்கு ஜோடியாக திரிஷா, ரெஜினா நடிக்க லியோ படத்தில் வில்லனாக நடித்திருக்கும் பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் வில்லனாக நடித்து வருகிறார்.
விடாமுயற்சியை அடுத்து அஜித் நடிக்கும் 63 வது படத்தை விஷால் நடித்து சமீபத்தில் வெளியான மார்க் ஆண்டனி படத்தை இயக்கிய ஆதிக் ரவிச்சந்திரன் இயக்குவதற்கு அவரிடத்தில் கதை சொல்லியிருப்பதாக தகவல்கள் வெளியாகின.
அதேப்போன்று அஜித்தின் 64வது படத்தை வெற்றிமாறன் இயக்க இருப்பதாக ஒரு தகவல் வைரலாகி வருகிறது. என்றாலும், இந்த இரண்டு தகவல்களும் உண்மையா? இல்லை வதந்தியா? என்பது போகப்போகத்தான் தெரியும்.