உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / ஹாய் நானா படத்தின் டீசர் ரிலீஸ் தேதி அறிவிப்பு

ஹாய் நானா படத்தின் டீசர் ரிலீஸ் தேதி அறிவிப்பு

நடிகர் நானி தற்போது புதுமுக இயக்குனர் சவுரியா இயக்கத்தில் 'ஹாய் நானா' எனும் படத்தில் நடித்து வருகிறார். இதில் கதாநாயகியாக மிருணாள் தாகூர் நடிக்கிறார். அப்பா, மகள் உறவு குறித்து இப்படம் உருவாகிறது. ஹிர்தியம் பட இசையமைப்பாளர் ஹேசம் அப்துல் வாகப் இசையமைக்கும் இந்த படத்தை வைரா நிறுவனம் தயாரிக்கின்றனர்.

இந்த படத்தின் மீது தெலுங்கு சினிமா ரசிகர்களுக்கு நல்ல எதிர்பார்ப்பு உள்ளது. இந்த நிலையில் இதன் டீசர் வருகின்ற அக்டோபர் 15ம் தேதி காலை 11 மணியளவில் வெளியாகும் என அறிவித்துள்ளனர். மேலும், இந்த டீசர் உடன் புதிய ரிலீஸ் தேதியும் படக்குழுவினர்கள் அறிவிப்பார்கள் என சினிமா வட்டாரங்களில் தெரிவிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !