உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / லால் சலாம் படத்தை கைப்பற்றிய ரெட் ஜெயன்ட் மூவிஸ்

லால் சலாம் படத்தை கைப்பற்றிய ரெட் ஜெயன்ட் மூவிஸ்

விஷ்ணு விஷால், விக்ராந்த் முக்கிய வேடங்களில் நடித்துள்ள படம் ‛லால் சலாம்'. ரஜினிகாந்த் சிறப்புத் தோற்றத்தில் நடித்துள்ள இந்த படத்தை அவரது மூத்த மகளான ஐஸ்வர்யா இயக்கியுள்ளார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கும் இந்த படத்தை லைகா நிறுவனம் தயாரித்துள்ளது. இப்படம் பொங்கலுக்கு திரைக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் தற்போது லால் சலாம் படத்தின் தமிழக ரிலீஸ் உரிமையை ரெட் ஜெயன்ட் மூவிஸ் பெற்றுள்ளதாக லைகா நிறுவனம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக இப்படம் தமிழகத்தில் உள்ள அதிகப்படியான தியேட்டர்களில் வெளியாகும் என்றும் தெரிகிறது. தற்போது லால் சலாம் படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து மற்ற பணிகள் நடைபெற்று வருகின்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !