நயன்தாராவின் ‛மண்ணாங்கட்டி' படப்பிடிப்பு தொடங்கியது
ADDED : 769 days ago
நயன்தாரா கதையின் நாயகியாக நடிக்கும் புதிய படம் மண்ணாங்கட்டி- சின்ஸ் 1960. லக்ஷ்மன்குமார் என்பவர் இயக்கும் இந்த படத்தில் நயன்தாராவுடன் யோகி பாபு, கவுரி கிருஷ்ணா, தேவதர்ஷினி ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள். பிரின்ஸ் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்த படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைக்கிறார். சமீபத்தில் பூஜை நடைபெற்ற இந்த படத்தின் படப்பிடிப்பு நேற்று முதல் கொடைக்கானலில் தொடங்கி உள்ளது. முதல் நாள் படப்பிடிப்பில் நயன்தாரா, யோகிபாபு கலந்து கொள்ளாத நிலையில் மற்ற நடிகர் நடிகைகள் சம்பந்தப்பட்ட காட்சிகளை படமாக்கி உள்ளனர். இன்னும் சில தினங்களில் நடைபெறும் படப்பிடிப்பில் அவர்கள் கலந்து கொண்டு தொடர்ச்சியாக நடிக்க உள்ளனர். நேற்று படப்பிடிப்பு தொடங்கியபோது எடுத்த புகைப்படங்களை அப்பட நிறுவனம் சோசியல் மீடியாவில் வெளியிட்டுள்ளது.