பிக்பாஸ் ஷிவினின் க்யூட் புகைப்படங்கள் வைரல்
ADDED : 730 days ago
பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் மிகவும் புகழ் பெற்றார் திருநங்கை ஷிவின். ஐடி ஊழியரான இவர் பிரபலமான மாடலும் கூட. பிக்பாஸ் வீட்டிலும் சரி வெளியிலும் சரி ஷிவினின் கேரக்டர் பலருக்கும் பிடித்து போனதால் அவருக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின் ஷிவினுக்கும் பட வாய்ப்புகள் கிடைக்கும் என்றே பலரும் எதிர்பார்த்தனர். ஆனால், ஷிவினுக்கு நடிப்பதற்கான வாய்ப்புகள் எதுவும் இதுவரை அமையவில்லை. அதேசமயம் மாடலிங்கில் ஏற்கனவே கலக்கி வந்த ஷிவின் தற்போது மீண்டும் மாடலிங்கில் இறங்கி போட்டோஷூட்டுகளை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் அண்மையில் மாடர்ன் உடையில் ஷிவின் வெளியிட்ட புகைப்படங்களில் அவர் மிகவும் க்யூட்டாக இருப்பதாக ரசிகர்கள் லைக்ஸ்களை குவித்து வருகின்றனர்.