உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / தீபாவளிக்கு வெளியாகும் தமன்னாவின் முதல் மலையாள படம்

தீபாவளிக்கு வெளியாகும் தமன்னாவின் முதல் மலையாள படம்

நடிகை தமன்னா தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் மட்டுமே கடந்த 20 வருடங்களாக கவனம் செலுத்தி நடித்து வந்தார். இந்த நிலையில் முதன்முறையாக மலையாளத்தில் நுழைந்துள்ள தமன்னா, நடிகர் திலீப் நடித்து வரும் 'பந்தரா' என்கிற படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார். கடந்த சில வருடங்களுக்கு முன்பு திலீப் வழக்குகளில் சிக்கி, சினிமாவில் இனிமேல் அவர் அவ்வளவுதான் என்கிற சூழல் நிலவியபோது அவருக்கு ராம்லீலா என்கிற ஹிட் படத்தை கொடுத்து நூறு கோடி வசூல் கிளப்பில் முதல் முறையாக அவரை இணைத்த இயக்குனர் அருண் கோபி தான் இந்த படத்தை இயக்கியுள்ளார்.

இந்த ராம்லீலா கூட்டணிக்கான எதிர்பார்ப்புடன், காவாலா பாடல் மூலம் கடந்த சில மாதங்களில் கேரளாவிலும் மிகப்பெரிய அதிர்வுகளை உருவாக்கிய தமன்னாவும் இப்படத்தில் கதாநாயகியாக நடித்திருப்பதால் அந்த எதிர்பார்ப்பு இன்னும் இரு மடங்காகி உள்ளது. வரும் நவம்பர் 10ம் தேதி தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இப்படம் வெளியாக இருக்கிறது. தமன்னாவின் முதல் மலையாள படமே அவருக்கு வெற்றியை தரும் என எதிர்பார்க்கலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !