உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / லியோ ரிலீஸ் எதிரொலி - மார்கழி திங்கள் படத்தின் ரிலீஸ் தேதி மாற்றம்!!

லியோ ரிலீஸ் எதிரொலி - மார்கழி திங்கள் படத்தின் ரிலீஸ் தேதி மாற்றம்!!

மனோஜ் பாரதிராஜா இயக்கத்தில் உருவாகியுள்ள படம் மார்கழி திங்கள். இப்படத்தில் ஷியாம், ரக்ஷனா என்ற புதுமுகங்கள் ஜோடி சேர்ந்துள்ள நிலையில், இயக்குனர்கள் பாரதிராஜா, சுசீந்திரன் மற்றும் அப்புக்குட்டி உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்திருக்கிறார்கள். இளையராஜா இசையமைத்துள்ளார்.
இந்த படத்தை அக்டோபர் 6ம் தேதி வெளியிடுவதாக முதலில் அறிவித்தவர்கள், அதன் பிறகு அக்டோபர் 20ம் தேதி வெளியிடுவதாக அறிவித்தார்கள். ஆனால் தற்போது அக்டோபர் 27ம் தேதி வெளியிடப் போவதாக புதிய அறிவிப்பு வெளியிட்டுள்ளார்கள். வருகிற 19ம் தேதி விஜய்யின் லியோ திரைக்கு வருவதால் மார்கழி திங்கள் படத்தின் ரிலீஸ் தேதி மாற்றி வைக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !