உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / விடாமுயற்சியில் இணையும் பிரியா பவானி சங்கர்

விடாமுயற்சியில் இணையும் பிரியா பவானி சங்கர்

நடிகர் அஜித்குமாரின் ‛துணிவு' படம் வெளியாகி கிட்டத்தட்ட 9 மாதங்கள் கழித்து தற்போது தனது அடுத்த படமான 'விடாமுயற்சி' படத்தில் நடித்து வருகிறார். இதனை மகிழ்திருமேனி இயக்குகிறார். லைகா புரொடக்சன்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிரூத் இசையமைக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு துபாயில் உள்ள அஜர்பைஜான் நாட்டில் கடந்த சில வாரங்களாக நடைபெற்று வருகிறது.

இதில் த்ரிஷா, ரெஜினா கசண்டரா என இருவரும் கதாநாயகிகளாக நடிக்கின்றனர் என தகவல்கள் வெளியானதை தொடர்ந்து இப்போது இப்படத்தில் மூன்றாவது கதாநாயகியாக நடிகை பிரியா பவானி சங்கர் இணைந்துள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.

சமீபத்தில் தனுஷ், சிம்பு ஆகிய முன்னனி நடிகர்களுடன் இணைந்து நடித்ததை தொடர்ந்து இப்போது அஜித்துடன் இணைந்து நடிக்க போகிறார் பிரியா பவானி சங்கர். இந்த தகவலை அவரது ரசிகர்கள் மகிழ்ச்சியில் சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !