உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / விஜய் 68வது படத்தில் வில்லனாக நடிக்கும் மோகன்

விஜய் 68வது படத்தில் வில்லனாக நடிக்கும் மோகன்

நீண்ட இடைவெளிக்கு பிறகு தாதா 87, பவுடர் போன்ற படங்களை இயக்குனர் விஜய் ஸ்ரீ இயக்கி வரும் ஹரா என்ற படத்தில் நாயகனாக நடித்து வருகிறார் மோகன். இப்படத்தின் பர்ஸ்ட் லுக், டீசர் வெளியான நிலையில் தற்போது இறுதி கட்ட படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இதை அடுத்து வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடிக்கும் 68 வது படத்திலும் நடிக்கிறார் மோகன். இந்த படத்தில் விஜய்யுடன் பிரபுதேவா, பிரசாந்த் ஆகியோர் இடம் பெற்ற பாடல் காட்சி முதல்கட்ட படப்பிடிப்பில் படமாக்கப்பட்ட நிலையில், தற்போது தென் ஆப்பிரிக்காவில் இப்படத்தின் ஆக்ஷன் காட்சிகள் படமாக்கப்பட்டு வருகிறது. இப்படத்தில் வில்லனாக நடிக்கும் மோகன் அங்கு விஜய்யுடன் சண்டைக் காட்சியில் நடித்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அந்த வகையில் செகண்ட் இன்னிங்ஸில் பாசிட்டிவ், நெகட்டிவ் என இரண்டு விதமான கதாப்பாத்திரங்களிலும் நடிக்க தொடங்கி இருக்கிறார் மோகன்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !