மேலும் செய்திகள்
பாடலாசிரியர், கவிஞர் பூவை செங்குட்டுவன் காலமானார்
687 days ago
ஆசிய நடிகர் விருது வென்ற டொவினோ தாமஸ்
687 days ago
ஹரி இயக்கத்தில் தாமிரபரணி, பூஜை போன்ற படங்களில் நடித்த விஷால் தற்போது மீண்டும் அவர் இயக்கும் தனது 34 ஆவது படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் அவருக்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடிக்க, இயக்குநர்கள் கவுதம் மேனன், சமுத்திரக்கனி மற்றும் யோகிபாபு உட்பட பலர் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள். இந்த படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு காரைக்குடியில் நடைபெற்று வந்த நிலையில், தற்போது அது குறித்த புகைப்படத்துடன் ஒரு தகவலை தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டு இருக்கிறார் விஷால்.
அதில், இப்படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு முடிவு பெற்றபோது சரியாக மழையும் வந்தது. இதை எங்களை இறைவனே வாழ்த்தியது போல் உணர்கிறேன் என்று ஒரு புகைப்படத்துடன் தெரிவித்துள்ளார் விஷால். தேவிஸ்ரீ பிரசாத் இசையமைக்கும் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் விரைவில் வெளியாக உள்ளது.
687 days ago
687 days ago