உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / நண்பர்களுக்கு பார்ட்டி கொடுத்த கீர்த்தி சுரேஷ்

நண்பர்களுக்கு பார்ட்டி கொடுத்த கீர்த்தி சுரேஷ்

மாமன்னன் படத்தை அடுத்து சைரன், ரிவால்வர் ரீட்டா, ரகு தாத்தா போன்ற படங்களில் நடித்து வருகிறார் கீர்த்தி சுரேஷ். இது தவிர சில தெலுங்கு படங்களிலும் நடித்து வரும் அவர், நேற்று முன்தினம் தன்னுடைய 31வது பிறந்த நாளை கொண்டாடியுள்ளார். அப்போது தனது திரையுலக நண்பர்களுக்காக அவர் ஒரு பார்ட்டி கொடுத்துள்ளார். இந்த பிறந்தநாள் பார்ட்டியில் இயக்குனர் அட்லி, அவரது மனைவி பிரியா, நடிகர் கதிர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டுள்ளார்கள். தன்னை நேரில் வாழ்த்த வந்த அனைத்து திரையுலக நண்பர்களுடனும் செல்பி எடுத்துக் கொண்டுள்ள கீர்த்தி சுரேஷ் அவற்றை வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படங்கள் பெரிய அளவில் சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !