தயாரிப்பாளரை நடிகராக மாற்றும் பாண்டிராஜ்
ADDED : 18 minutes ago
தலைவன் தலைவி படத்தின் வெற்றிக்கு பிறகு பாண்டிராஜ் தற்போது ஒரு படத்தை இயக்கி, தயாரித்து வருகிறார். இதில் முதன்மை வேடத்தில் மலையாள நடிகர்களான ஜெயராம், ஊர்வசி நடிக்கின்றனர். பாண்டிராஜின் பசங்க புரொடக் ஷன்ஸ் மற்றும் லைகா நிறுவனத்தில் பணிபுரிந்த தமிழ் குமரன் ஆகிய இருவரும் இணைந்து தயாரிக்கின்றனர். மேலும், இந்த படத்தில் மிக முக்கியமான போலீஸ் அதிகாரி கதாபாத்திரத்தில் தமிழ் குமரனை நடிக்க வைத்துள்ளாராம் பாண்டிராஜ். இதுவரை திரைக்கு பின்னால் தயாரிப்பாளராக பணிபுரிந்து வந்த தமிழ் குமரன் இப்போது நடிகராக களமிறங்கி உள்ளார். விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது.